Categories
தேசிய செய்திகள்

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுமா…? மத்திய அரசு தகவல்…!!

கோவிஷீல்ட் தடுப்பூசியில் பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும் என செய்தி வெளியான நிலையில் அது பாதுகாப்பானது என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கோவிஷீல்ட் பயன்படுத்துவதால் ரத்த உறைவதாக பல தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்த தகவலை மறுத்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இங்கிலாந்து மற்றும் பிரேசில் நாடுகளில் பரவி வரும் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டவை என ஐசிஎம்ஆரின் இயக்குநர் பல்ராம் பார்கவா உறுதிபட கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளின் ஆற்றல் குறித்து பல தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் அதை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |