சேலம் மாவட்டத்தில் திருவிழா பணிக்கு சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் ராஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் உள்ளான். மேலும் ரமேஷ் திருமண விழாக்களில் லைட் செட்டிங் மற்றும் பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தொப்பளான் காட்டுவளவு பகுதியில் திருவிழாவிற்கு பணிக்காக சென்றுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் பன்னீர்செல்வம் அவரது கிணற்றில் மோட்டார் சரியாக வேலை செய்யவில்லை. அதனால் மோட்டரை சரிசெய்து தருமாறு ரமேஷிடம் கேட்டுள்ளார். ஆனால் ரமேஷ் சிறிது நேரம் கழித்து வருகிறேன் என்று பன்னீர் செல்வத்திடம் கூறியுள்ளார். இதனையடுத்து பன்னீர் செல்வம் மாலை நேரத்தில் கிணற்றருகே சென்றுள்ளார். அப்போது ரமேஷ் உடல் கருகி இறந்த நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.