பாரதிராஜாவால் தோல்வியை சந்தித்த பிரியாமணியின் வெற்றிக்கு காரணம் பருத்திவீரன் படம் தான் என்று இன்றும் பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் பாரதிராஜாவுக்கு என்று பெரும் பேர் உள்ளது. ஏனென்றால் அவரின் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மிகவும் பிரபலம் ஆவார்கள். ஆனால் அதில் விதிவிலக்காக பாரதிராஜா இயக்கத்தில் பிரியாமணி முதல் முறையாக கதாநாயகியாக நடித்த “கண்களால் கைது செய்” திரைப்படம் தோல்வியை சந்தித்தது.
இதைத் தொடர்ந்து அவர் நடித்த கனாக்காலம், மது உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால் பிரியாமணி மிகவும் நொந்து போனார். சோகத்தில் இருந்த பிரியாமணிக்கு அதிர்ஷ்டவசமாக கார்த்தியின் பருத்திவீரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரியாமணி மாபெரும் வரவேற்பை பெற்றார்.
இதைத்தொடர்ந்து பிரியாமணி மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், சாருலதா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவர் எத்தனை படங்களில் நடித்தாலும் அவர் பெயர் சொன்னால் ஞாபகம் முதல் படம் பருத்திவீரனாகத்தான் இருந்து வருகிறது.