கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அமெரிக்காவில் டோனட் இலவசமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டதால் மக்கள் கூட்டமாக வந்து தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.
கொரோனா தொற்று சீனாவில் இருந்து பரவ தொடங்கி உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கான தடுப்பூசியை பல நாடுகளும் கண்டுபிடித்தனர். ஆனால் அந்தக் தடுப்பூசிக்கு உரிய விழிப்புணர்வு இல்லாததால் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு வருடம் முழுவதும் இலவசமாக டோனட் வழங்கப்படும் என்று க்ரிஸ்பி க்ரீம் என்ற கடை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் குவிந்துள்ளது.
மேலும் தடுப்பபூசி செலுத்தி கொண்டவர்கள் அட்டையை காண்பித்து வருடம் முழுவதும் தினமும் தங்கள் கடையில் வந்து டோன்ட்டை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிப்பு விடுத்துள்ளது.தடுப்பூசிசெலுத்துவது தனி நபர் உரிமை என்றாலும் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதை கருத்திற்கொண்டு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக என்று கூறுகின்றனர்.