‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல தடைகளை தாண்டி சமீபத்தில் தான் இந்த படம் ரிலீசானது.
இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா ராம்சே எனும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் . இந்நிலையில் இந்த மிரட்டலான கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் முதலில் நடிகர் தனுஷ் நடிக்க இருந்ததாகவும் பின்னர் சில காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.