Categories
மாநில செய்திகள்

அசுர வேகத்தில் கொரோனா…. தஞ்சை, காஞ்சியில் கல்லூரி மாணவர்களுக்கு தொற்று உறுதி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தற்போது பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தஞ்சையில் 257 பள்ளி மாணவர்கள், 38 கல்லூரி மாணவர்கள் என 225 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் காஞ்சிபுரம் தனியார் மருத்துவக்கல்லூரியில் புதிதாக 40 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |