Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சருமத்திற்கு பொலிவுடன், அழகு சேர்க்கும் விதமாக… ரோஜா பூவில்… வீட்டிலேயே ரொம்ப சிம்பிளா செய்யலாம்..!!

ரோஜா குல்கந்து செய்ய தேவையான பொருட்கள்:

பன்னீர் ரோஜாப்பூ – 20
நெய்                             – 100 மில்லி
சர்க்கரை                    – ஒரு கப்
பால்                              – 2 கப்
ஏலக்காய்த்தூள்     – சிறிதளவு
முந்திரிப் பருப்பு    – 10

செய்முறை:

முதல்ல கடாயை அடுப்புல வச்சி அதில் லேசாக நெய் ஊற்றி சூடேற்றியதும், அதில் முந்திரி பருப்பை போட்டு நல்லா சிவக்க வறுத்து எடுத்துக்கணும்.

பிறகு ரோஜாப்பூவில் உள்ள இதழ்களாக மட்டும் ஆய்ந்து எடுத்து, மிக்ஸிஜாரில்ல போட்டு நல்லா மையாக  அரைசிக்கனும். பின்னர் அதே கடாயை அடுப்புல வச்சி கூடுதலாக சிறிது நெய்யை ஊற்றி சூடானதும், அதில் அரைச்சி வச்ச ரோஜா கலவையை ஊற்றி நல்லா வதக்கிக்கணும்.

பின்னர் ரோஜா கலவை நன்கு வதங்கியதும், அதில் சர்க்கரையை சேர்த்து நல்லா கிளறி விட்டபிறகு, அதில் பால் சேர்த்து கெட்டியாகக் வரும் வரை கிளறி விடவும்.

கடைசியில் கிளறிவிட்ட கலவையுடன், மீதமுள்ள நெய் ஊற்றியதும், அதில் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப் பருப்பை சேர்த்து நல்லா கிளறி விட்டு ஓரளவு கெட்டியாக இருகியதும் இறக்கி  வைத்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறினால் ருசியான ரோஜா குல்கந்து ரெடி.

Categories

Tech |