Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பயப்படாம இதை செய்யுங்க…. பாதுகாப்புக்கு நாங்க இருக்கோம்…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

மதுரை மாவட்டத்தில் மக்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளார்கள்.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் விதி முறைகளையும் நடத்தைகளையும் தேர்தல் குழு அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா நடைபெறாமலிருக்க ஆங்காங்கே பறக்கும் படையினரை தேர்தல் குழு நியமித்தது. மேலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் காவல்துறையினருடன் ஒன்று சேர்ந்து மக்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக அனைத்து பகுதிகளிலும் கொடி அணிவகுப்பை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் மதுரை மாவட்ட கிழக்கு சட்டமன்ற தொகுதியிலிருக்கும் பகுதிகளான ஊமச்சிகுளம், செட்டிகுளம், ஆலத்தூர் உட்பட சில முக்கிய ஊர்களில் துணை ராணுவத்தினரும் காவல்துறையினரும் சேர்ந்து மக்களின் அச்சத்தை போக்கும் விதமாகவும், 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிட்டும் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளார்கள்.

Categories

Tech |