Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத்தன பேரா செஞ்சிருக்காங்க…. தூத்துக்குடியில் நடந்த கோர சம்பவம்…. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்காக சி.பி.ஐ 71 பேர் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை ஒன்று அமைந்துள்ளது. இதனை மூடக் கோரி கடந்த 2018ஆம் ஆண்டு பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டத்தில் காவல்துறையினர் பொதுமக்களில் 13 பேரை சுட்டு தள்ளினார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் தலைமை குற்றவியல் நீதிமன்றம் இச்சம்பவத்தை சி.பி.ஐ விசாரிப்பதற்கு உத்தரவிட்டது.

அதன்பேரில் இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி வந்ததில் முதல் கட்டமாக 2019ஆம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் 27 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து கூடுதலாக 44 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக இவ்வழக்கில் 71 நபர் மீது குற்றப்பத்திரிக்கை சாட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |