வேலூர்,காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலாக மழைபெய்துள்ள நிலையில் தமிழகத்தின் இன்னும் சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் கிரிசமுத்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், செட்டியப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததுடன் , சேத்துப்பட்டு, போளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பரவலாக கொட்டித் தீர்த்தது.
காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததுடன்,நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் நல்ல மழை பெய்தது .இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.