ஏப்ரல் 1 முதல் டிஜிட்டல் வரியை ரத்து செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கிளை நிறுவனம் தொடங்கி ஆன்லைன் விற்பனையில் ஈடுபடும் வெளிநாட்டு மின்னணு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டியை உள்நாட்டு நிறுவனங்கள் சமாளிக்க இந்த வரிவிதிப்பு கொண்டுவரப்பட்டது. தற்போது இந்திய நிறுவனங்கள் நிரந்தர அலுவலகத்துடன் வருமான வரி செலுத்தும் பட்சத்தில் இந்த வரி செலுத்த தேவையில்லை. ஏப்ரல் 1 இந்த முறை அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.