Categories
உலக செய்திகள்

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வடகொரியா.. பதற்றத்தில் அண்டை நாடுகள்.. தொலை தூரம் பாயும் ஏவுகணை சோதனை..!!

அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வட கொரியா நீண்ட தொலைவில் இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்ததாக தெரிவித்துள்ளது. 

வடகொரியாவின் ஏவுகணை சோதனையை அமெரிக்காவும், ஜப்பானும் கடுமையாக எதிர்க்கின்றன. இந்த ஏவுகணை சோதனையானது ஜோ பைடன் அதிபரான பிறகு வடகொரியா மேற்கொள்ளும் முதல் பாலிஸ்டிக் சோதனையாகும். மேலும் ஆயுதங்கள் மற்றும் அச்சம் ஏற்படுத்தும் வகையில் சோதனை நடத்துவதாக கூறி வடகொரியாவிற்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.

ஏற்கனவே வட கொரியா இரு தினங்களுக்கு முன்பு மஞ்சள் கடலில் சிறிய தூரம் சென்று தாக்கும் அளவில் பாலிஸ்டிக் இல்லாத ஏவுகணையை சோதனை செய்ததால் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது வெகு தொலைவு செல்லக்கூடிய வகையில் இரு பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

எனினும் ஜப்பான் தங்கள் பிராந்திய கடலிற்குள் ஏவுகணையின் பாகங்கள் எதுவும் விழவில்லை என்று கூறியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க இராணுவத் தளபதி, வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் மற்றும் சட்டத்தை மீறி மேற்கொள்ளும் ஆயுத திட்டம் போன்றவை பிற  நாடுகளுக்கும் சமூகத்திற்கு அச்சத்தை உண்டாக்கும் விதமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |