Categories
உலக செய்திகள்

வலிப்பு நோயால் சாலையில் விழுந்த கனடிய பெண் …வளர்ப்பு நாய் என்ன செய்தது தெரியுமா ?

கனடிய பெண்மணி ஒருவர் சாலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்து  தனது வளர்ப்பு நாயால் உதவி பெற்றுள்ளார் .

ஒட்டாவா பகுதியை சேர்ந்த ஹேலி மூர் என்பவர் தனது வளர்ப்பு நாயுடன் மார்ச் 16 அன்று காலை நடை பயணத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சாலையின் ஓரத்தில் விழுந்துள்ளார். இதனை அறிந்த அவரின் செல்ல நாய் சாலை நடுவே சென்று வாகனத்தை வழிமறித்துள்ளது .அந்த வழியாக லாரியில் வந்த ட்ரிடான் ஓட்வெ லாரியை  நிறுத்திவிட்டு உதவி செய்துள்ளார்.

பிறகு அவர் மருத்துவ குழுவினருக்கு தகவல் அளித்து அவர்கள் உடனே வந்து ஹேலிக்கு முதல் உதவி அளித்துள்ளனர்.அவரின் வளர்ப்பு நாயான கிலோவேர் ஹேலியின் பெற்றோருக்கு இதனை குறித்து தகவல் அளிக்க சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் தகவலை அறிந்து அவர்களே  ஹெலியை பார்ப்பதற்கு வந்துள்ளனர். மேலும் ஹேலிக்கு எவ்வாறு வலிப்பு நோய் வந்தது என்பது பற்றி  தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |