சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் பிரான்சின் முன்னாள் பனிச்சறுக்கு உலகச் சாம்பிய வீரர் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது .
பிரான்ஸின் முன்னாள் பனிச்சறுக்கு உலக சாம்பிய வீரரான 40 வயதான பொமகல்ஸ்கி யூரியின் மண்டலத்தில் நான்கு பேர் கொண்ட குழுவில் பனிச்சறுக்கு விளையாடும் போது பனியில் சிக்கிய உயிரிழந்ததாக ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த பனி சறுக்கில் பிரான்ஸ் வீரரான புருனோ புடெல்லியும் சிக்கி பலியாகியுள்ளார்.
மற்றோரு வீரர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. இந்தக் குழு ஜேம்ஸ்டாக் மலையிலிருந்து சறுக்கி கொண்டிருக்கும் போது திடீரென்று பனி சரிவு ஏற்பட்டதாகவும் மேலும் இந்த பனிக்கட்டி உடைந்து சரிந்ததற்கான காரணம் தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.