Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைப்பெற்ற திருவிழா… புஷ்ப பல்லக்கில் அம்மன் காட்சி…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்..!!

சேலம் மாவட்டத்தில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள குமாரசாமிபட்டியில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது அந்தக் கோவிலில் குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த  16 ஆம் தேதி கால் நாட்டத்துடன்  தொடங்கியது. மேலும் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து நேற்று எராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர். மேலும் தொடர்ந்து ஆடு கோழிகளை பலி செய்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளனர். மேலும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதன் பின் மாலை 6 மணியளவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |