கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் பதவி விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
கர்நாடகாவில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பாஜக எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார் .இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் பெரும்பாண்மையை நிரூபித்தார் .
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சபாநாயகர் பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியது .இதனால் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் தானே முன்வந்து பதவி விலகியதாக தெரிகிறது .