Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோவ்…! “18 யானைகளா”….!! மிரட்டும் கும்கி 2 கிளைமாக்ஸ்…. இயக்குனர் பிரபு சாலமன் சுவாரஸ்ய தகவல்…!!

கும்கி 2 எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்று அப்படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. கும்கி யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்கியிருந்தார்.மேலும் இப்படத்தில் லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மெகா ஹிட்டான கும்கி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் கூறியதாவது, கும்கி 2 படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னும் 20 சதவீதம் மட்டுமே பாக்கியுள்ளது. கும்கி படத்தின் முதல் பாகத்தில் கிளைமாக்ஸ் கை கொடுக்கவில்லை என்றாலும் எமோஷனல் சீன் அதனை சரி செய்தது.

ஆனால் கும்கி 2வில் அப்படி எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஏனென்றால் கும்கி 2 படத்தின் கிளைமாக்ஸ் சீனில் 18 யானைகள் இடம் பெற்றிருக்கிறது. இதனைப் பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளியே செல்லும் ஒவ்வொருவருக்கும் கம்பீரமான உணர்வு ஏற்படும். மேலும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் மே அல்லது ஜூன் மாதங்களில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |