Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நாங்க கேட்டதெல்லாம் செஞ்சு கொடுங்க…. விவசாயிகள் போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. அவ்வழுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அதாவது வாழைப்பந்தல், மேல்புதுப்பாக்கம் உள்ளிட்ட சில கிராமங்களில் பயிர்களுக்கான நேரடி கொள்முதல் நிலையங்களை அமைக்கக்கோரி அப்போராட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் கலவை வட்டார செயலர் சம்பத் தலைமை தாங்கிய தோடு வட்டார அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்துள்ளார். மேலும் நெற்பயிர்களுக்கான ஆதரவு விலையை நிர்ணயிக்கவும், வேளாண்மை அலுவலகத்தின் மூலம் விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்கிடவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கப்பட்டிருக்கும் பயிர்க்கடன் மற்றும் நகை கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்யவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Categories

Tech |