புளோரிடாவில் 20 நாட்களாக மழைநீர் வடிகுழாயில் சிக்கிய பெண் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடாவில் சாலையோரமாக அமைந்துள்ள மழைநீர் வடிகுழாயிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று யாரோ உதவி கேட்பது போன்று சத்தம் கேட்டதால் வழிப்போக்கர் ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார் .உடனே தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்களுடன் போலீஸ் வந்து வடிகுழாயில் சிக்கியிருந்த பெண்ணை கண்டு அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பிறகு வெகுநேரம் முயற்சித்த பின் அந்த பெண்ணை நிர்வாண நிலையில் மீட்டுள்ளனர்.மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் கூறிய தகவலை கேட்டு தீயணைப்புக்கு வீரர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
அவர் 43 வயதான லென்சை கேனடி,மார்ச் 3ஆம் தேதி கால்வாய்க்கு நீந்த சென்றுள்ளார். அங்கே ஏதோ சுரங்கப்பாதை வழியாக பாதாள சாக்கடைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்து திரும்புவதற்கு வழி தெரியவில்லை என்பதால் சுமார் 20 நாளாக வழியைத் தேடி அலைந்து உள்ளார். இறுதியில் மழை நீர் குழாய்களில் இருந்து வெளிச்சம் வருவதை கண்டு அங்கு சென்று யாரவது வழிப்போக்கரை கூப்பிடுவதற்கு அமர்ந்துள்ளார் .அதேபோன்று அந்த பக்கம் யாரோ வருவதை கண்டு உதவி கேட்டுள்ளார் . இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது