தேனியில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.
தேனி மாவட்டம் உப்பு கோட்டையில் வினோத் குமார் என்பவர் கூலி தொழிலை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் 160 அடி செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அப்பகுதியில் சூழ்ந்த பொதுமக்கள் எவ்வளவு கூறியும் அவர் கீழே இறங்கி வராமல் இருந்துள்ளார் . இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வீரபாண்டி காவல்துறையினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் கீழே இறங்குமாறு கூறியுள்ளார்கள். ஆனாலும் அவர் கீழே இறங்கி வராமல் அங்கேயே நின்று கொண்டிருந்து சிறிது நேரம் கழித்து கீழே இறங்கியுள்ளார். அதன்பின் காவல்துறையினர்கள் வினோத்குமாரை கைது செய்து விசாரணை செய்ததில், அவர் தேர்தல் நியாயமான முறையில் நடக்க வேண்டும் என்றும், பணம் பட்டுவாடா போன்ற செயல்கள் நடைபெற கூடாது என்றும், ஊழல் செய்யும் அதிமுக அரசு தேர்தலில் ஜெயிக்க கூடாது திமுக ஆட்சிதான் வரவேண்டும் என்று கூறியுள்ளார்.