Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ஷங்கரின் அடுத்த இரண்டு படங்களில் இவர்தான் ஹீரோயினா?… தீயாய் பரவும் தகவல்…!!!

இயக்குனர் ஷங்கரின் அடுத்தடுத்த இரண்டு படங்களில் கைரா அத்வானி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது .

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது . இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகளுக்கான வேலை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் இந்த படத்தில் ஹீரோவாக ஹிந்தியில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்வீர்சிங் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களிலும் கதாநாயகியாக நடிகை கைரா அத்வானி நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. நடிகை கைரா அத்வானி நடிகர் மகேஷ்பாபுவுடன் பரத் எனும் நான், நடிகர் ராம்சரணுடன் வினய விதேய ராமா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் ஷங்கரின் அடுத்தடுத்த இரண்டு படங்களில் கைரா அத்வானி நடிக்க இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் .

Categories

Tech |