தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வருகை குறைந்துள்ளதால் பெரும்பாலான திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறார். அதன்படி கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் விதிமுறைகளுடன் கடந்த மாதம் திறக்கப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் குறிப்பிட்ட தெருக்கள் மற்றும் பகுதிகளில் ஊரடங்கு அமல் படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள், அதன் பிறகு கடுமையான கட்டுப்பாடுகளுடன் திறக்க பட்டாலும் மக்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் ஊழியர்கள் சம்பள,மின்சார கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவை சமாளிக்க முடியாமல் பல திரையரங்குகளை திருமண மண்டபம் ஆகவும், வணிக வளாகங்களாகவும் மாற்றி வருகின்றனர். மேலும் பல திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டுள்ளது.