Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ஹீரோயினாகும் ‘துப்பாக்கி’ பட நடிகை… வெளியான சூப்பர் தகவல்…!!!

‘துப்பாக்கி’ படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்த சஞ்சனா சாரதி தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தில் நடிகர் விஜய்யின்  தங்கைகளில் ஒருவராக நடித்தவர் சஞ்சனா சாரதி . இவர் தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இந்நிலையில் நடிகை சஞ்சனா சாரதி தெலுங்கில் நடிகர் நவீன் சந்திரா ஹீரோவாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடிகை சஞ்சனா சாரதி ‘தெலுங்கில் எனக்கு இது முதல் படம். எனக்கு வாய்ப்பளித்த படக்குழுவினருக்கு நன்றி. இந்த படம் காதல், நகைச்சுவை உணர்வுகள் நிறைந்த கமர்சியல் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்.

Sanjana-Sarathy-6 – MaplaBench

நான் மிகவும் இளம்வயதிலேயே சினிமா வாழ்க்கைக்கு வந்துவிட்டேன். துப்பாக்கி படத்தில் நடித்த பிறகு எனக்கு பெரும்பாலும் தங்கை கதாபாத்திரத்திற்கு நடிக்க வாய்ப்புகள் வந்தது. இதனால் நடிப்பில் இருந்து சிறிது காலம் விலகி சரியான வாய்ப்புக்காக காத்திருந்தேன். இதனிடையே இணைய தொடர்களில் கிடைத்த தரமான கதாபாத்திரங்களில் நடித்து எனது திறமையை நிரூபித்தேன். தற்போது நான் கதாநாயகியாக நடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறியுள்ளார். மேலும் இவர் தமிழில் ஹரிபாஸ்கர் நாயகனாக நடிக்கும் ‘நினைவோ ஒரு பறவை’ படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |