Categories
உலக செய்திகள்

“நான் போய் வருகிறேன்”…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

பிரிட்டனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர் தற்கொலை செய்த சம்பவம் குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்தவர் கியான் சவுத்வே (15 வயது). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10 ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பரவல்  காரணமாக நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு போடப்பட்டது. இதனால் பள்ளிகள் எதுவும் செயல்படவில்லை. மேலும் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறிய கியான் தற்கொலை செய்து கொள்ள போகும் செய்தியை தனது நண்பர்களுக்கு சமூக ஊடகம் வழியாக தெரிவித்துள்ளார்.

இச்செய்தியினை கண்ட அவரது சகோதரி ஒருவர் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே பெற்றோர்கள் கியானின் அறைக்கு சென்று பார்க்கும்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. மேலும் இந்த விசாரணையில் சிறுவன் பள்ளிக்கு செல்ல முடியாமலும், நண்பர்களை சந்திக்க முடியாமலும், தேர்வினை சரியாக எழுத முடியாமலும்  கஷ்டப்பட்டு வந்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |