பிரிட்டனில் தடுப்பூசி மையங்கள் அடைக்கப்படும் உடனடியாக முன்பதிவு செய்யுமாறு தேசிய சுகாதார சேவை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை அதிகாரிகள் வருகின்ற திங்கட்கிழமையிலிருந்து தடுப்பூசி செலுத்தும் மையங்கள் தற்காலிகமாக அடைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் NHS புது ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிடும்.
எனவே 50 வயதிற்கும் அதிகமான நபர்கள் மற்றும் பிற நோய்களால் எளிதில் பாதிப்படைபவர்கள், விரைவாக முன்பதிவு செய்துகொண்டு தடுப்பூசிக்கான முதல் டோஸை செலுத்திக்கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அதாவது 50 வயது மற்றும் அதற்கு அதிகமான வயதுடைய நபர்கள் இங்கிலாந்தின் தேசிய முன்பதிவு திட்டத்தை உபயோகித்து வருகின்ற மார்ச் 29ம் தேதிக்குள் இணையதளத்தில் முதல் டோஸிற்கான முன் பதிவுகளை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 18 வயதுடைய நபர்கள் மற்றும் அதற்கு அதிகமான வயதுடையவர்களும் உடல்நல பிரச்சனைகளால் பாதிப்படைந்திருந்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவதற்கு முன் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் தடுப்பூசிக்கான விற்பனை தடை ஏப்ரல் வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் Devon, Cornwall, Kent போன்ற அதிக மக்கள்தொகை உள்ள தடுப்பூசி மையங்கள் ஒரு மாதத்திற்கு அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது