தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் பிரச்சாரத்தின் போது பேசிய முதல்வர் பழனிசாமி, “இன்றைக்கு நாம் மின்சாரத்துறையில் விருது பெற்றிருக்கிறோம். நீர் மேலாண்மையில் தேசிய விருது வாங்கி இருக்கிறோம் எனவே இந்தியாவிலேயே அதிக விருது பெற்ற மாநிலம் நம் தமிழ்நாடு தான்” என்று பெருமிதம் கொண்டுள்ளார்.