உத்திரப்பிரதேச மாநிலத்தில் 4 பேர் கொண்ட கும்பல் காட்டுப்பகுதியில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி தனது காதலனுடன் ஒரு காட்டுப் பகுதிக்கு சென்று உள்ளார். அங்கு 4 பேர் கொண்ட கும்பல் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் அந்த கும்பலிடம் தப்பித்து அவசர உதவி எண்ணிற்கு அழைத்து தன்னை காப்பாற்றுமாறு கூறிவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மயங்கி விழுந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.
இதை அடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் 4 பேர் கொண்ட கும்பல் தன் பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதனால் அவர் மயங்கி விழுந்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மயக்கம் தெளிந்து அந்த சிறுமி எழுந்து தான் தான் தன் காதலனுடன் காட்டு பகுதிக்கு சென்றதாகவும் அப்போது திடீரென்று அங்கு வந்த 4 மர்ம நபர்கள் தன்னை கற்பழித்ததாகவும் அந்த சிறுமி கூறினாள். மேலும் அந்த நபர்களின் பெயர்களையும் போலீசாரிடம் தெரிவித்தார். சிறுமி அளித்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறுமியின் காதலன் குறித்தும், அந்த மர்ம நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.