உலகிலேயே மிகப் பெரிய ஓவியத்தை வரைந்த கலைஞர் அந்த ஓவியத்தை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை குழந்தைகளின் நலனுக்காக கொடுத்துள்ளார்.
துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் 1600 சதுர மீட்டர் கொண்ட பிரம்மாண்டமான ஓவியத்தை பிரிட்டன் கலைஞர் Sacha Jafri என்பவர் வரைந்தார். இதனை வரைந்த முடிக்க அவர் 8 மாதங்கள் செலவிட்டார். ” The Journey Of Humanity ” என்று பெயரிடப்பட்ட Sacha Jafri வரைந்த இந்த ஓவியம் தான் உலகிலேயே மிகப்பெரிய ஓவியம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடத்தை பிடித்தது.
இந்த பிரம்மாண்ட ஓவியத்தை 70 பகுதிகளாக பிரித்து விற்பதற்காக அந்த ஓவியக் கலைஞர் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது பிரெஞ்சு தொழிலதிபர் Andre Abdoune என்பவர் அவரது முழு ஓவியத்தையும் மொத்தமாக விலை கொடுத்து வாங்கியுள்ளார். இந்த ஓவியத்தை அவர் 45 மில்லியன் பவுண்ட் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.
இந்த பணம் இந்தோனேசியா,இந்தியா,பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் பின்தங்கிய குழந்தைகளுக்கு உதவுவதற்காக கொடுக்கப்படுகிறது. இந்த 45 மில்லியன் பவுண்ட் பணமும் Dubai Cares,UNICEF,UNESCO,Global Gift Foundation மூலம் குழந்தைகளை சென்றடையும் என்று Sacha Jafri மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.