Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கரும்புள்ளிகள், தழும்புகள் நீங்க இது ஒன்று போதுமா ..!!!

வேப்பிலையை கொண்டு எளிய முறையில் கரும்புள்ளிகளை அகற்றுவது எப்படி என பார்ப்போம் . 

வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட்  செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும்.

neem leaf paste க்கான பட முடிவு

வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, சேகரித்துக் கொள்ள வேண்டும் .தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் இதிலிருந்து  சிறிது ஊற்றி, குளித்தால் சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் மறைந்து விடும் .

neem leaf க்கான பட முடிவு

வேப்பிலையை ஸ்கின் டோனராகவும் பயன்படுத்தலாம். அதற்கு தினமும் இரவில் படுக்கும் போது, அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை நீங்கும் . தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாக வேப்பிலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம் .

neem paste on face க்கான பட முடிவு

 

வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும்.  வேப்ப மரத்தின்  வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். மேலும்  இதற்கு  சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது .

 

Categories

Tech |