ஜெர்மனியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரசினால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. சிறிது காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்திருந்தது. தற்போது அது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22657 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக Robert Koch நிறுவனம் கூறியுள்ளது. ஏழு நாட்களில் ஒரு லட்சம் பேரில் எத்தனை பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிவதற்காக ஒரு கணக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது.
அதில், 7 நாளில் 1,00,000 பேரில் 113.3 பேர் என்ற விகிதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று குறைய தொடங்கியது. இதனால் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தனர் . ஆனால் தற்போது மீண்டும் ஜெர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது.