Categories
உலக செய்திகள்

கண்டிப்பா இது பாதுகாக்கும்…. கொரோனாவுக்கு எதிரான புதிய கவசம்…. கண்டுபிடிப்பில் அசத்திய மெக்சிகோ ஆய்வாளர்…!!

மெக்சிகோவை சேர்ந்த ஆய்வாளர் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மூக்கு கவசத்தை கண்டுபிடித்துள்ளார்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று அரசு மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தாலும் அவர்கள் ஏதாவது ஒரு இடங்களில் தண்ணீர் குடிக்கும் போதோ அல்லது உணவு அருந்தும் போதோ அதனை கழற்றி வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதனால் அச்சமயத்தில் தங்களுக்கு கொரோனா பரவி விடுமோ  என்று சிலருக்கு பயமும் இருந்து வருகின்றது.

இதனிடையே  முககவசத்தை போன்றே மூக்கில் அணியும் கவசத்தை மெக்சிகோவை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்த மூக்குகவசத்தை எங்கேயும் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் இல்லை, இதனை போட்டுக்கொண்டே நாம் உணவினை அருந்தலாம் என்று ஆராட்சியாளர் கூறியுள்ளார். மேலும் கொரோனா பரவலின் முக்கிய இடமாக சுவாச உறுப்பு இருப்பதால் இந்த மூக்குக்கவசம் கண்டிப்பாக நம்மை அவற்றிலிருந்து பாதுகாக்கும் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |