இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் ஃபேஷன் என்ற பெயரில் விதவிதமான ஹேர்ஸ்டைல் களும், ஆடைகளும் அணிந்து வருகின்றனர். இது இளைஞர்களுக்கு ஃபேஷனாக தெரிந்தாலும் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும் படியாக இருக்கிறது. இந்நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய பெற்றோர் வீட்டில் இருந்து வெளியில் சென்றிருந்த நிலையில், முடியை ஸ்ட்ரைட் செய்ய வேண்டும் என்ற ஆசையில் யூட்யூப் வீடியோவை பார்த்துள்ளார்.
அப்போது அந்த யூட்யூப் வீடியோவை பார்த்த அவர் தலையில் மண்ணெண்ணெய் தடவி தீ பற்ற வைத்துள்ளார். அப்போது தீ பிடித்து அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்கு நாகரீக பழக்கவழக்கங்கள் குறித்த ஆலோசனைகளையும் வழங்க வேண்டும.