தேர்தல் காரணமாக திருச்சியில் உயர் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் ஒழுங்கு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பணம் பட்டுவாடா போன்றவை நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி ஆட்சியர் சிவராசு திருச்சியின் சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜனும் தேர்தல் ஆணையத்தால் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் முடியும் வரை தேர்தல் பணியில் ஈடுபட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.