Categories
உலக செய்திகள்

ஜனவரி 1ம் தேதி வந்தீங்களா…? அப்போ உடனே நாட்டை விட்டு போங்க…. அதிரடி அறிவிப்பு கொடுத்த பிரான்ஸ்…!!

பிரான்சில் இருக்கும் பிரிட்டன் மக்கள் மார்ச் 31 ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அரசு தகவல் கொடுத்துள்ளது.

பிராக்சிட் சட்டம் அமலுக்கு வந்த பிறகு கடந்த வருடம் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக பிரிட்டனில் இருந்து பிரான்சுக்கு வந்த மக்கள் ஊரடங்கு காரணமாக தனது அங்கேயே தங்கி உள்ளனர். இந்நிலையில் தற்போது பிரான்ஸ் அரசு மார்ச் 31-ஆம் தேதிக்குள் தங்கள் நாட்டில் வந்து தங்கியுள்ளவர்கள் வெளியேற வேண்டும் என்று தகவலை தெரிவித்துள்ளது அதன்படி ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு பிரான்சிற்கு வந்து தங்கியவர்களின் 90 நாள்களுக்கான கால வரையறை மார்ச் 31 ஆம் தேதியோடு முடிவடைகின்றது.

இதனையடுத்து பிரான்சில் வாழிட உரிமம் வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை, ஆனால் வாழிட உரிமம் இல்லாதவர்கள் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் இல்லை என்றால் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் விசாவில் குறிப்பிட்ட காலவரையறை உள்ளவர்களும், இரட்டை குடியுரிமை உள்ளவர்களும், ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும், பிராக்சிட் திட்டம் அறிமுகமாகும் முன்பு இங்கு வசிப்பவர்களும் தங்கள் நாட்டில் தங்கி கொள்ளலாம் என்ற தகவல்களையும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |