இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிக அளவில் பரவிக் கொண்டு வருகின்றது. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 17 லட்சத்து 87 ஆயிரத்து 534 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு நேற்று ஒரே நாளில் 251 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனா வைரஸால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 592 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 12 லட்சத்து 31 ஆயிரத்து 650 ஆக கணக்கு பட்டியலில் உள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 26 ஆயிரத்து 490 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். உலக நாடுகள் முழுவதிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3 லட்சத்து 95 ஆயிரத்து 192 பேர் சிகிச்சை அளித்து வருகின்றனர். உலக நாடுகள் முழுவதும் நேற்றுவரை 5 கோடியே 31 லட்சத்து 45 ஆயிரத்து 709 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.