உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் சீரகத் தண்ணீரை வெறும் வயிற்றில் தினமும் ஒரு டம்ளர் குடிப்பது மிகவும் நல்லது.
நம் அன்றாட வாழ்வில் தினம் தினம் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் மிக முக்கியமானவை. அதை நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவை. அவ்வாறு உடலுக்கு பல்வேறு நன்மைகளை உணர்வுகளை மிக கவனமாக எடுத்து கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழ வகைகளில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதனை தவிர்த்து தினமும் அதிக அளவு தண்ணீர் குடிப்பது உடலுக்கு பல நன்மைகளை தரும்.
அவ்வாறு குடிக்கும் தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு குடித்தால் அதில் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரை பருகி வந்தால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். காலையில் ஒரு டம்ளர் சீரகத் தண்ணீர் பருகி வந்தால் சுவாசம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். சீரகத் தண்ணீர் கல்லீரலுக்கு நல்லது. உடலில் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவும். இளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு அருமருந்தாகும். வயிற்று வலிக்கு நிவாரணம் தரும். அஜீரண கோளாறு மற்றும் குமட்டல் வராமல் காக்க உதவும். இதனை குழந்தைகளுக்கும் கொடுத்து வரலாம்.