Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால எங்க வாழ்வாதாரமே போச்சு… போட்டோ கடை உரிமையாளர்களின்… கடையடைப்பு போராட்டத்தால் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் போட்டோ ஸ்டூடியோ, வீடியோ கடை உரிமையாளர்கள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தலுக்கு வீடியோ எடுக்கும் பணியை அந்தந்த மாவட்டங்களில் உள்ள வீடியோ போட்டோ தொழிலாளர்களிடம் அளிக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அளித்துள்ளனர். இதனை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர், காளையார் கோவில், சிங்கம்புணரி, சிவகங்கை, அந்தந்த மாவட்டம் முழுவதிலும் வீடியோ எடிட்டிங், போட்டோ ஸ்டுடியோ, கலர் லேப் மற்றும் புகைப்பட தொழிலை சார்ந்த அனைத்து கம்பெனிகளும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வீடியோ கடையின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், கார்ப்பரேட் கம்பெனிக்கு தேர்தலில் வீடியோ ஒளிப்பதிவு செய்யும் பணியை வழங்கி வருகிறார்கள். இதனால் எங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த சம்பளத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் வழங்கும் வேலையை பார்த்து வந்தோம். இந்த பணியை எங்ளுக்கு நேரடியாக வழங்கினால் மட்டுமே முழுமையான சம்பளத்தை தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கும். இதன் காரணமாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு எங்களது நிலையை கொண்டு செல்வதற்காக இந்த ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

Categories

Tech |