Categories
லைப் ஸ்டைல்

அடடே! முட்டை சாப்பிடுவதால் மாரடைப்பு வராதாம்…. ஆராய்ச்சியாளர்கள் கருத்து…!!!

ஒரு நாளைக்கு நாம் எத்தனை முட்டை சாப்பிடலாம் அதனால் என்ன நன்மை என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நாம் சாப்பிடும் ஒரு முட்டையில் 80 கலோரி சத்து நிறைந்திருக்கிறது. சிலருக்கு முட்டையின்          வெள்ளைக்கரு பிடிக்கலாம். ஒரு சிலருக்கு மஞ்சள் கரு பிடிக்கலாம். ஆனால் நமக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடலாம். உடல் பருமன் கொண்டவர்கள், மற்றும் முதியவர்கள் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது. தினமும் 30 மில்லிகிராம் கொழுப்பு சத்து நம் உடலுக்கு தேவைப்படுகிறது. முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது.

குழந்தைகளுக்கு முட்டையை அரை வேக்காடாக அவித்து அதன் வெள்ளைக்கருவை மட்டும் கொடுத்து சாப்பிட கொடுத்தால் மிகவும் நல்லது. உண்மையிலேயே முட்டை சாப்பிடுவதால் மாரடைப்பு நோய் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முட்டையில் வெள்ளைக்கருவில் தான் சற்று அதிகமாக புரதசத்து கிடைக்கிறது. அதனால் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளை கருவை மட்டும் உட்கொண்டால் புரதச் சத்தை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால் உடற்பயிற்சியை மேற்கொள்பவர்கள் முட்டைகளை உடைத்து குடிக்கின்றனர். கணினியின் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டாலே போதும். உடல் உழைப்பு அதிகமுள்ள வேலைகளில் ஈடுபடுபவர்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம். பொதுவாக முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 வரை சாப்பிடலாம். எனவே அளவாக சாப்பிட்டு நலமாக வாழ்வோம்.

Categories

Tech |