Flipkart நிறுவனம் பெங்களூருவில் தனது முதல் offline மையத்தை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
உலக மக்கள் அனைவரும் தங்கள் தேவைகளை இருந்த இடத்திலிருந்தே பெரும் வசதிகளை கொண்டு பூர்த்தி செய்து வருகின்றனர். இதனால் பிளிப்கார்ட் அமேசான் போன்ற பல வணிக நிறுவனங்கள் தங்களது ஆன்லைன் சேவையை தொடங்கினர். அந்த நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் பர்னிச்சர் பிரிவில் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு பர்னிச்சர்க்கென்று மைய பெங்களூரில் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில் 1800 சதுர அடி பரப்பளவில் flipkart நிறுவனம் பர்னிச்சர் பொருள்களை தொட்டு உணர்ந்து பார்த்து தேர்ந்தெடுக்கும் வகையில் அறை கலன்களை காட்சிப்படுத்த உள்ளது. மேலும் அந்த குறிப்பிட்ட அறை கலனை கூகுள் லென்ஸ் மூலம் புகைப்படம் எடுப்பதன் மூலம் அதை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். அறை கலன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அதை நேரில் பார்த்து வாங்க விரும்புகின்றனர். இதை காரணமாகக் கொண்டு flipkart நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளது.