Categories
மாநில செய்திகள்

மீண்டும் திரும்புகிறதா அபாய கட்டம்?… அச்சத்தில் சென்னை மக்கள்… ஒரு வாரத்தில் 156% அதிகரித்த கொரோனா பாதிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதனையடுத்து  மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பு 156 சதவீதம் அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,779 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 664 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதனால் தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,43,954 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோவை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

Categories

Tech |