அமெரிக்காவில் தற்போது அதிபராக உள்ள ஜோ பைடன் மீண்டும் நாட்டிற்கு அதிபராக வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்த முடிந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றிப்பெற்று தற்போது அதிபராக பதவி வகித்து வருகிறார் . அங்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை அதிபருக்கான தேர்தல் நடைபெறுவது வழக்கம் .நடந்த முடிந்த தேர்தலில் அவருக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வந்தன . ஆனால்அவற்றை எல்லாம் கடந்து ட்ரம்பை வீழ்த்தி ஜோ பைடன் வெற்றி பெற்றார். மேலும் அந்நாட்டு அதிபர்கள் வெள்ளை மாளிகையில் வசிப்பது வழக்கம்.
அதனைப்போலவே ஜோ பைடன் பதவியேற்ற பிறகு முதல் முறையாக வெள்ளை மாளிகையில் பேசினார். அப்போது பேசியஅவர் , அமெரிக்காவில் தற்போது வரை கொராேனா தடுப்பூசி முதல் 100 நாட்களில் 200 மில்லியன் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். மேலும் 2024 இல் நடைபெற இருக்கும் அதிபருக்கான தேர்தலில் போட்டியிடுவது என் லட்சியம் என்றும் அது எனது எதிர்பார்ப்பும் என்று கூறினார். இதனையடுத்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆனால் நாங்கள் மோதலை விரும்பவில்லை சர்வதேச விதிகளின்படி சீனாவை எதிர்கொள்வோம் என்று அவர் சூளுரைத்து உள்ளார். .