Categories
தேசிய செய்திகள்

நீங்க புது ரேஷன் கார்டு வாங்கணுமா?… அப்போ இதெல்லாம் கட்டாயம் வேணும்… செக் பண்ணிக்கோங்க…!!!

நீங்கள் புதிதாக ரேஷன் கார்டு வாங்க விரும்பினால் இந்த ஆவணங்கள் எல்லாம் கட்டாயம் தேவைப்படும்.

ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். அது இருந்தால் மட்டுமே உணவுப் பொருட்களை வாங்க முடியும். அது ஒரு குடும்பத்தின் முழுமையான தகவலை தருகிறது. ரேஷன் கார்டு இருந்தால் அரசிடம் இருந்து இலவசமாக கிடைக்கும் அனைத்து பொருட்களையும் நாம் வாங்க முடியும். கொரோனா காலகட்டத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக அரசு பல உதவிகளை செய்தது. எனவே இது மிக முக்கியம். ஆனால் புதிதாக ரேஷன் கார்டு வாங்குவது என்பது மிகக் கடினமான ஒன்று. அதற்கு நீண்ட காலம் ஆகும். நீங்கள் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பதற்கு முன்பாக இதனை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் ரேஷன் கார்டு வாங்கும் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு https://tnpds.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும். மேலும் ரேஷன் கார்டுகளில் இரண்டு வகை உள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்காக ஒரு தனி ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வறுமை கோட்டுக்கு மேல் வசிப்பவர்களுக்கு தனியாக ஒரு ரேஷன் கார்டு உள்ளது.

இதில் ஏதாவது ஒன்றில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது கேட்கப்படும் தகவல்களை சரியாக பதிலளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி மிகுந்த எச்சரிக்கையுடன் அதனை நிரப்ப வேண்டும். குறிப்பாக இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, பணியாளர் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை கட்டாயம்.

Categories

Tech |