கொரோனா தொற்றால் பிரேசிலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,00,000 த்தை தாண்டி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 2,009 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிரேசிலில் இதுவரை கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 3,00,685 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாவது ,புதன்கிழமை ஒரே நாளில் 89,992 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,22,20,011 பேராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவிற்கு பிறகு பிரேசில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில இருப்பதாக கூறப்படுகிறது.