Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றுக்கு மாத்திரை… பைசர் நிறுவனம் முயற்சி..!!

கொரோனாவிற்கு பைசர் நிறுவனம் மாத்திரை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனாவிற்கு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதில் பைசர் தடுப்பூசியும் ஒன்று. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோ டெக் நிறுவனமும் சேர்ந்து உருவாக்கிய தடுப்பூசி அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டார், இந்நிலையில் பைசர் நிறுவனம் கொரோனாவிற்கு மாத்திரை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் இந்த மாத்திரையின் முதற்கட்ட ஆய்வக பரிசோதனை தற்போது தொடங்கியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது: கொரோனா அறிகுறி ஏற்படும் போது இந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |