திருநெல்வேலியில் கொரோனா தொற்று மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது.
சீனாவிலிருந்து உலக நாடுகள் அனைத்திற்கும் கொரோனா தொற்று பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இத்தொற்று தமிழகத்திற்கும் வெகுவாக பரவி அனைவரது உயிர்களையும் பழிவாங்க ஆரம்பித்தது. இதனால் அரசாங்கம் தொற்று குறித்த பல விதிமுறைகளை அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அங்காங்கே நடத்தியதையடுத்து பொதுமக்களின் ஒத்துழைப்பால் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய கொரோனா தற்போது மீண்டும் கடந்த ஆண்டு போலவே பரவத் தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில் நெல்லையில் ஒரே நாளில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,930 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை15,607 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 108 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.