நெல்லை அருகே மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தொற்று சீனாவிலிருந்து தோன்றி அனைத்து பகுதிகளிலும் பரவியது. இத்தொற்றின் பரவலை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டுகின்றனர். மேலும் தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியதோடு மட்டுமல்லாமல் சில விதிமுறைகளையும் கொண்டு வந்தது.
இந்நிலையில் அரசாங்கத்தின் முயற்சியாலும் பொது மக்களின் ஒத்துழைப்பாலும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய கொரோனா தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே ஒரே தெருவில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினை சீல் வைத்ததோடு மட்டுமல்லாமல் பொதுமக்கள் செல்வதற்கும் தடை விதித்துள்ளனர்.