நடிகை வரலட்சுமி சரத்குமார் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர் . இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூலை வாரி குவித்தது.
https://twitter.com/priyamudanBIGIL/status/1374898382477557764
மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் உலக அளவில் பிரபலமடைந்துள்ளது . இந்த பாடலுக்கு பலரும் நடனமாடி அசத்திய வீடியோக்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில் இந்த பாடலுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் நடனமாடிய வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிகர் விஜயுடன் இணைந்து ‘சர்க்கார்’ படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .