Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 46-வது அதிபர்… முதல் 100 நாளில் 200 மில்லியன் கொரோனா தடுப்பூசி.. அதிரடி பேட்டி…!!!

ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்காவில் 46 ஆவது அதிபராக பதவியேற்று முதல்முறையாக செய்தியாளர்களை வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. அந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றிபெற்று அமெரிக்காவில் 46- ஆவது புதிய  அதிபராக கடந்த மாதம் ஜனவரியில் பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்ற நாள் முதல் தற்போது வரை செய்தியாளர்களை சந்திக்க வில்லை. ஆனால் நேற்று முதல்  முறையாக  வெள்ளை மாளிகையில் அதிபர்  ஜோ பைடன் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தற்போது அமெரிக்காவில் கொராேனா தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் மே மாதம்  இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் . அதுமட்டுமல்லாமல் முதல் 100 நாட்களில் 200 மில்லியன் டோஸ் தடுப்பூசி செலுத்துவது எனது நோக்கம் என்று அவர்  கூறியுள்ளார் . ஆனால் இதனை செய்வது மிக  கடினம்  என்றாலும் நம்மால் செய்ய முடியும் என்று நம்பிக்கை மிக  உள்ளது. என்று அவர் தெரிவித்துள்ளார்.மேலும் நாட்டில்  உள்ள பைசர்,மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் என மூன்று நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தி வருகிறது என்று தெரிவித்துயுள்ளார் .

Categories

Tech |