Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட ஆண்டுக்குப் பிறகு திரைக்கு ரீ-என்ட்ரி கொடுத்த பிரபல நடிகை…. ரசிகர்கள் வரவேற்பு…!!

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகை ஸ்ரீ தேவி மீண்டும் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியான ரிக்ஷா மாமா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. இதை தொடர்ந்து அவர் காதல் வைரஸ் படத்தின் மூலமாக தமிழில் முதல் முறையாக ஹீரோயினாக நடித்தார்.இந்த படம் அவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.

ஸ்ரீ தேவி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார். அதன்பின் அவருக்கு திருமணம் ஆனதால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு நிகழ்ச்சியின் மூலமாக திரைத்துறைக்கு  ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

அதன்படி தெலுங்கு ஸ்டார் மா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி நடுவராக இருந்து வருகிறார். இவரது இந்த ரீ என்ட்ரியை பிரபலங்களும், ரசிகர்களும் வரவேற்று வருகின்றனர்.

Categories

Tech |