நடிகை நதியா தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகை நதியா கடந்த 1985ஆம் ஆண்டு வெளியான ‘பூவே பூச்சூடவா’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தினார். இதன்பின் நதியா கடந்த 1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு மகள்கள் உள்ளனர். நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகை நதியா ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார் . தற்போது நடிகை நதியா திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
https://twitter.com/ActressNadiya/status/1375312332591558661
இந்நிலையில் நடிகை நதியா தனது 20 வயது மகள் ஜனாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது மகள் ஜனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் அம்மா-மகள் போல இல்லை அக்கா-தங்கச்சி போல் இருக்கிறார்கள் எனக் கூறி ஜனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.